வருத்தம் தெரிவிக்கும்வரை 12 எம்.பிக்களின் இடைநீக்கம் தொடரும் – நாடாளுமன்ற விவகார அமைச்சர்
12 எம்.பிக்களும் தங்கள் செயல் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வரை அவர்கள் மீதான இடைநீக்க உத்தரவு தொடரும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
12 எம்.பிக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் நிலையில் அமைச்சரின் விளக்கம் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஆனால் 12 எம்பிக்களும் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர்கள் மீதான இடை நீக்க உத்தரவு தொடரும் என மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் திட்டவட்டமாக தெரிவித்தார், இதனால் எதிர்க்கட்சிகள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
இதனைப்படிக்க...குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு - சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3J0tDfx
via IFTTT
एक टिप्पणी भेजें for "வருத்தம் தெரிவிக்கும்வரை 12 எம்.பிக்களின் இடைநீக்கம் தொடரும் – நாடாளுமன்ற விவகார அமைச்சர்"