Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

டிச.15 முதல் பொள்ளாச்சி - திருச்செந்தூர்; செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில்கள்: ரயில்வே

பொள்ளாச்சி - திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 முதல் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 08.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி, மணியாச்சி, தாழையூத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சினா விளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனவும், இந்த ரயில்கள் பாலக்காடு - பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - பாலக்காடு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களின் இணைப்பு ரயில்களாக செயல்படும்.

image

மேலும் செங்கோட்டை - கொல்லம் முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 15 முதல் செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் கொல்லம் - செங்கோட்டை முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 16 முதல் கொல்லத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பகவதிபுரம், நியூ ஆர்யங்காவு, தென்மலை, எடமன், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

கோவை: உடை இறுக்கமாக அணிந்த மாணவனை அடித்த ஆசிரியர்மீது பெற்றோர் புகார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DMqkon
via IFTTT

एक टिप्पणी भेजें for "டிச.15 முதல் பொள்ளாச்சி - திருச்செந்தூர்; செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில்கள்: ரயில்வே"