Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

'பெற்றோரை கொன்றுவிடுவோம்' - உ.பியில் போதைப்பொருள் கலந்து 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் 17வயது மாணவியை பள்ளி மேனேஜர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள புர்காசி பகுதியில் செயல்பட்டு வருகிறது ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளி (GGS International School). இந்த பள்ளியில் படித்துவரும் 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேர் உணவில் அதே பள்ளியைச் சேர்ந்த மேனேஜர்கள் இருவர் போதைப்பொருளை கலந்துள்ளனர். உணவை சாப்பிட்டதும் மாணவிகள் சுய நினைவை இழந்துள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட இருவரும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Come after you get raped: Unnao cops tell woman || பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறை முனைவதாகவும், மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவத்தை வெளியே சொன்னால் ஃபெயில் ஆக்கி விடுவோம் என மிரட்டிய குற்றவாளிகள், மாணவிகளின் பெற்றோரை கொலை செய்துவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rCXzIe
via IFTTT

एक टिप्पणी भेजें for "'பெற்றோரை கொன்றுவிடுவோம்' - உ.பியில் போதைப்பொருள் கலந்து 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை"