Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

வங்கி ஊழியர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வங்கிகள் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக அரசுடன் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் ஊழியர்களின் இந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

நேற்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து வங்கிகள் சங்க கூட்டமைப்பினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்று இருப்பதால் தினசரி வங்கி சேவைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிமாற்றங்கள் , ஏடிஎம் சேவைகள் என வங்கிகளின் பல கோடி மதிப்பிலான பண பரிவர்தனை சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியுள்ளனர். ஆகவே மத்திய அரசு தன் முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

image

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் ஊழியர்களும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

தொடர்புடைய செய்தி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு - வங்கி ஊழியர்கள் 2நாள் வேலைநிறுத்தம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3E6UN0i
via IFTTT

एक टिप्पणी भेजें for "வங்கி ஊழியர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம்"