சபரிமலை: அப்பம், அரவணை பிரசாத விற்பனை ரூ. 27 கோடியை தாண்டியது
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துவரும் சூழலில், அப்பம், அரவணை பிரசாத விற்பனை 27 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டு, தரிசனத்திற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மண்டல பூஜைக்காக நடை திறந்தது முதல், தற்போது வரை அப்பம், அரவணை விற்பனை மூலம் 27 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் வாரியார் கூறியுள்ளார். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப அரவணை, அப்பம் தயாரிக்கும் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க ரூ.1.5 கோடி - புதிய சேவை அறிமுகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FkAmP8
via IFTTT
एक टिप्पणी भेजें for "சபரிமலை: அப்பம், அரவணை பிரசாத விற்பனை ரூ. 27 கோடியை தாண்டியது"