Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

'உ.பி.யில் பாஜக 325 இடங்களில் வெற்றி பெறும்' - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

'2022 உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 325 இடங்களில் வெற்றி பெறும்' என யோகி ஆதித்யநாத் கூறினார்.
 
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், '' நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். எங்களது மக்கள் பணிகள் மற்றும் சாதனைகள் காரணமாக தேர்தலில் அமோக வெற்றியைப் பெற முடியும். மேலும் பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். உத்திரப்பிரதேச சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 403 இடங்களில் ஆளும் கட்சி குறைந்தபட்சம் 325 இடங்களையாவது கைப்பற்றும்.
 
image
உத்தரப் பிரதேசத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் காட்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும்? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை பாஜக அரசு காட்டியுள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சியின் பலன்கள் என்ன என்பதை, மத்தியில் மோடி அரசும், உத்தரபிரதேசத்தில் எங்களது அரசும் சிறந்த முறையில் காட்டியுள்ளன.
 
அரசின் சாதனைகளை வைத்து மக்களிடம் வாக்கு கேட்போம். கிராமங்கள் முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு ரேஷன், சிலிண்டர், மின்சாரம் இணைப்புகள், கல்வி வசதிகள் மேம்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் உத்தரப் பிரதேச அரசின் சாதனைகள். இந்த சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் சென்று வெற்றி பெறுவோம்'' என்றார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Gbe7es
via IFTTT

एक टिप्पणी भेजें for "'உ.பி.யில் பாஜக 325 இடங்களில் வெற்றி பெறும்' - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை"