4 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனை ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்
பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஒரு மருத்துவர், ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர் மற்றும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது பெருநகர மும்பை மாநகராட்சி.
மகாராஷ்டிரா மாநிலம் வோர்லியில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 4 மாத ஆண் குழந்தை உட்பட நான்கு பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மறுநாள் நான்கு மாத ஆண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. உரிய நேரத்தில் சிகிச்சையை தொடங்காத மருத்துவர்களின் அலட்சியத்தாலே குழந்தை உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, ஒரு உழியர் கூட அவர்களை சந்திக்க வரவில்லை என்பதைக் காண முடிந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் டாக்டர் அஜய் சந்தன்வாலே தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணை நடத்தியது. இந்நிலையில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஒரு மருத்துவர், ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர் மற்றும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 3 பேரை பெருநகர மும்பை மாநகராட்சி பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதனிடையே மருத்துவமனை ஊழியர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் குழந்தையின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது எனவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xR3oTw
via IFTTT
एक टिप्पणी भेजें for "4 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனை ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்"