இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கொரோனா வகை உலக நாடுகளில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அதன்படி, அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வந்த 72 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவரது மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டதாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தென்னாப்ரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா வந்த 33 வயது நபருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31lZoyE
via IFTTT
एक टिप्पणी भेजें for "இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு"