குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழப்பு 7ஆக உயர்வு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது எப்படி? விசாரணைக்கு விமானப்படை உத்தரவு
விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மூவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. ஆனால் யார் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விபத்துகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rTWBXY
via IFTTT
एक टिप्पणी भेजें for "குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழப்பு 7ஆக உயர்வு"