செமி கண்டக்டர் உற்பத்திக்கு ரூ.76 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செமி கண்டக்டர் உற்பத்திக்கு அடுத்த 6 ஆண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் உள்ளது. அண்மையில் கொரோனா பொதுமுடக்கத்தால் உற்பத்தி பாதித்து செமி கண்டக்டர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. வாகனங்கள், மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, செமி கண்டக்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதனைப்படிக்க...கேரளா: பாலின பேதமின்றி மாணவர்களுக்கு சீருடை - போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3q26Sif
एक टिप्पणी भेजें for "செமி கண்டக்டர் உற்பத்திக்கு ரூ.76 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல் "