முழுக்க ஒன்பிளஸ் 9 புரோ போனில் ஷூட் செய்யப்பட்ட ‘2024’ திரைப்படம்! ஓடிடியில் வெளியானது
வழக்கமாக ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது போனைக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போட்டோ எடுப்பது. சமூக வலைதள பயன்பாட்டுக்காக ‘சின்ன.. சின்ன’ வீடியோக்கள் எடுப்பது மாதிரியான பணிகளை செய்வார்கள். அதை நம்மில் பலர் செய்திருக்கவும், அப்படி செய்பவர்களை பார்த்திருக்கவும் கூடும்.
ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஹிந்தி மொழியில் Feature ஃபிலிம் ஒன்றினை எடுத்துள்ளார்கள் என்றால் நம்ப முடியுமா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ‘2024’ திரைப்படக் குழு. அதுவும் இந்த படம் முன்னணி OTT தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 2024 திரைப்படம் தற்போது வெளியாகியும் உள்ளது.
இந்த திரைப்படம் முழுவதும் ‘ஒன்பிளஸ் 9 புரோ’ ஸ்மார்ட்போனின் கேமரா ஃப்யூச்சர்களை பயன்படுத்தி படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதை முழுவதும் கற்பனை. நான்கு இளைஞர்கள் வைரஸ் பரவலுக்கு மத்தியில் உயிர் வாழ எதிர்கொள்ளும் சர்வைவல் சவால்கள் தான் படத்தின் ஒன்லைன்.
ரோஹின் ரவீந்திரன் நாயர் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஒன்பிளஸ் 9 புரோ போனில் பின்பக்கத்தில் மட்டும் நான்கு கேமராக்கள் உள்ளன. 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் டெலி போட்டோ கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் கேமரா, 2 மெகாபிக்சல் மோனோகுரோம் கேமரா இந்த போனில் உள்ளன.
2024 படத்தின் மூலம் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் கிரியேட்டிவாக யோசிக்கும் பயனர்களை கவர முடியும் என நம்புகிறதாம் ஒன்பிளஸ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rrUJFV
एक टिप्पणी भेजें for "முழுக்க ஒன்பிளஸ் 9 புரோ போனில் ஷூட் செய்யப்பட்ட ‘2024’ திரைப்படம்! ஓடிடியில் வெளியானது"