Skip to content Skip to sidebar Skip to footer

Widget HTML #1

பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

மத்திய ஆசிய நாடுகளுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து வெளியுறத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
 
கசாக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடனிருந்தனர்.
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mj8684
via IFTTT

एक टिप्पणी भेजें for "பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு"