”தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்”- லெப்டினண்ட் ஜெனரல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்திருக்கும் ஒரேயொரு நபரான கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை குறித்து லெப்டினண்ட் ஜெனரல் அருண் மற்றும் மருத்துவமனைதரப்பு இன்று பேசியுள்ளனர்.
லெப்டினண்ட் ஜெனரல் அருண் பேசுகையில், “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கின்றது. பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தீக்காயங்கள் என்பதால், வருண் சிங்-கிற்கு தோல் மாற்று சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகத்திலிருந்து தோல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்புடைய செய்தி: மேல்சிகிச்சைக்கு பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டார் கேப்டன் வருண்சிங்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GF3JMg
via IFTTT
एक टिप्पणी भेजें for "”தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்”- லெப்டினண்ட் ஜெனரல்"