“அபாயகரமான வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன ஆய்வகம் அமைக்கப்படும்” - டி.ஆர்.டி.ஓ

அபாயகரமான வைரஸ்களில் இருந்து மனித குலத்தை காப்பது குறித்து ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிநவீன ஆய்வகம் ஒன்றை அமைக்க உள்ளது!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வைரஸ் ஆய்வகம் அமைக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (DRDO) இயக்குநர் மன்மோகன் பரிதா தெரிவித்தார். வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றிய அதிநவீன உயிரியல் ஆய்வகங்கள் உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே இருப்பதாகவும் அது போன்ற ஆய்வகத்தை இந்தியாவும் அமைக்க இருப்பதாகவும் மன்மோகன் பரிதா தெரிவித்தார். ஐஐடிக்கள், பிரபல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து உயிரியல் தற்காப்பு குறித்த ஆய்வுகளை மக்கள் நலனுக்காக மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் உயிரியல் தாக்குதல்களை சமாளிக்க தயராக வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mj36Ah
via IFTTT
एक टिप्पणी भेजें for "“அபாயகரமான வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள அதிநவீன ஆய்வகம் அமைக்கப்படும்” - டி.ஆர்.டி.ஓ"