ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி, 14 தொடரிலும் வென்று சாதித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lFOf2x
via IFTTT
एक टिप्पणी भेजें for "ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம்"