தொடங்கியது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து விமானம் வழியாக டெல்லி கொண்டுசெல்லப்பட்டது. தற்போது தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசியக்கொடி ஏந்தி ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திவருகின்றனர். கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் சற்றுநேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dDwTyY
via IFTTT
एक टिप्पणी भेजें for "தொடங்கியது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்"