ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஊழியர்கள் அலுவலகம் திரும்புவதை ஒத்திவைத்த கூகுள்?
கூகுள் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி 10 முதல் உலகம் முழுவதும் இயங்கி வரும் தனது அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என சொல்லி இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஜனவரி 10 முதல் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என கடந்த ஆகஸ்டில் கூகுள் தெரிவித்திருந்தது. அதன் மூலம் வொர்க் ஃப்ரெம் ஹோம் திட்டத்தை கைவிடுவதாகவும் சொல்லி இருந்தது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒமைக்ரான் கொரோனா திரிபு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கூகுள் அந்த முடிவை கைவிட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஊழியர்கள் எப்போது அலுவலகம் வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என கூகுள் நிர்வாகம், ஊழியர்களிடம் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xRuDxd
एक टिप्पणी भेजें for "ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஊழியர்கள் அலுவலகம் திரும்புவதை ஒத்திவைத்த கூகுள்?"