ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணி - முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப்பணிகளில் உதவியதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது மீட்புப்பணியில் உடனடியாகவும், நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. துயரகரமான ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப்பணிகளிலும், காயம்பட்டவர்களை காப்பாற்றும் பணிகளிலும் உதவியதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த உடனேயே காட்டேரி கிராம மக்களும், காவல்துறையினரும், விரைந்துசென்று உடனடியாக மீட்புப்பணிகளில் இறங்கியதோடு, அப்பகுதி மக்கள் கம்பளிகள், பெட்ஷீட்டுகளை அளித்து காயம்பட்டவர்களை விபத்துப் பகுதியில் இருந்து மீட்க உதவியிருந்தனர். விபத்து நடந்த உடனேயே நடந்த மீட்புப்பணிகளால் 3 பேர் காயம்பட்டிருந்தனர். உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இச்சூழலில் விமானப்படை தனது நன்றியை தமிழக முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்: ஒரு கிலோ தக்காளி ரூ. 80 - ரூ. 90 வரை விற்பனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pLQi6m
via IFTTT
एक टिप्पणी भेजें for "ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணி - முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி"