கேரளா: ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு – ரயில்கள் ரத்து
கேரள மாநிலம் ஆரியங்காவு ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை - கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.
இன்று கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், கொல்லம் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கோட்டையிலிருந்து இயக்கப்படும்.
மேலும் நேற்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DwSSC6
via IFTTT
एक टिप्पणी भेजें for "கேரளா: ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு – ரயில்கள் ரத்து"