”கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்”- டெல்லியில் போராடும் விவசாயிகள் உறுதி
டெல்லியில் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடக்கும் போராட்டங்கள் எதுவும் நிறுத்தப்படப்போவதில்லை என்றும், “விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும்வரை டெல்லியில் போராட்டம் தொடரும்” என்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் தரப்பில் விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் மத்திய அரசால் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தாலும், ‘போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவது மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதையடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த ஐவரும், இன்று தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். இவர்கள், 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை கொண்டுள்ள ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’விடம் இன்று சிங்குவில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகே, “போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: டெல்லி: விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? இன்று ஆலோசனை
இதுகுறித்து விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் தெரிவிக்கையில், “வழக்குகளை வாபஸ் பெறும் முன்பு, போராட்டத்தை கைவிட்டால், எங்களுக்கு அது சிக்கலாக மாறும். ஆகவே விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான காலக்கெடுவை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மதியம் 2 மணிக்கு மற்றுமொரு ஆலோசனை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3IvBHV9
via IFTTT
एक टिप्पणी भेजें for "”கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்”- டெல்லியில் போராடும் விவசாயிகள் உறுதி"