"பிரதமர் மோடியின் முடிவுகளால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு" -ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் முடிவுகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பரப்புரைக்கு முன்னோட்டமாக அமேதியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமரின் தவறான முடிவுகளால் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். பணமதிப்பு நீக்கம், தவறான முறையில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது.
கொரோனா கால கட்டத்தில் போதிய உதவிகள் செய்யாதது ஆகியவையே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணம் என ராகுல் காந்தி தெரிவித்தார். கங்கை நதியில் நீராடும் பிரதமர் மோடி வேலைவாய்ப்பின்மை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும் பங்கேற்றார். 2004ஆம் ஆண்டு ராகுல் காந்தி முதன் முதலாக அமேதி தொகுதியில் இருந்துதான் மக்களவைக்கு முதன்முதலாக தேர்வானார். ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி அமேதி தொகுதியை பறிகொடுத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pgBNIR
via IFTTT
एक टिप्पणी भेजें for ""பிரதமர் மோடியின் முடிவுகளால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு" -ராகுல் காந்தி"