பெற்றோரின் அஸ்தியை கங்கையில் கரைத்த 'தலைமை தளபதி' பிபின் ராவத்தின் மகள்கள்
கடந்த புதன்கிழமை குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு அவர்களது மகள்கள் கிருத்திகா, தாரிணி என இருவரும் இறுதி சடங்குகளை செய்தனர். ராணுவ மரியாதையுடன் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையியல் அவர்களது அஸ்தி மகள்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களது பெற்றோரின் அஸ்தியை கங்கை நதியில் கரைத்துள்ளனர். அவரது சொந்த மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் பகுதியில் பாய்ந்தோடும் கங்கையில் கரைக்கப்பட்டது.
பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oMucS4
via IFTTT
एक टिप्पणी भेजें for "பெற்றோரின் அஸ்தியை கங்கையில் கரைத்த 'தலைமை தளபதி' பிபின் ராவத்தின் மகள்கள்"