இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி கரை திரும்பினர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை தலைமன்னார் அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 10 விசைப்படகுகள் மீது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு எரிந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நல்வாய்ப்பாக தாங்கள் யாரும் காயமின்றி கரை திரும்பியதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பியதால் ஒரு விசைப்படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதால் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Evnghp
via IFTTT
एक टिप्पणी भेजें for "இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்"