எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார எல்லை விவகாரம் - காவல் துறைக்கு மம்தா புதிய உத்தரவு
எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகார எல்லையை மீறவிடாமல் தடுத்திட வேண்டுமென மாநில காவல்துறைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து பாதுகாப்பு படையில் சோதனை செய்யும் அதிகாரம் 50 கிலோ மீட்டராக நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், மாநில காவல்துறை டிஜிபிக்கு மம்தா பானர்ஜி பிறப்பித்த உத்தரவில், இந்திய-வங்க தேச எல்லை பகுதியான கரீம்பூர் மாவட்டத்தில் பிஎஸ்.எஃப் படையினர் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள அதிகார எல்லைக்குள் அவர்கள் கடமையை செய்யட்டும் என்றும் அந்த எல்லையை மீறிடாமல் தடுத்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pC9fby
via IFTTT
एक टिप्पणी भेजें for "எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார எல்லை விவகாரம் - காவல் துறைக்கு மம்தா புதிய உத்தரவு"