வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய வசதி
குரல் பதிவு குறுஞ்செய்திகளை அனுப்பும் முன் சரிபார்க்கக் கூடிய புதிய வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் பயனாளர், வழக்கம்போல மைக் குறியீட்டை அழுத்தி விட்டு, மேல் நோக்கி இழுத்த பிறகு குரலைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு நிறுத்த பொத்தானை அழுத்தி விட்டு ப்ளே பொத்தானை அழுத்தினால் குரல் பதிவைக் கேட்டு சரிபார்க்கலாம். அதற்குப்பிறகு பதிவை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தி அனுப்பி விடலாம்.
இந்த வசதியால், தவறான குரல் பதிவை அனுப்புவதை முன்கூட்டி சரிபார்த்து தவிர்த்துக் கொள்ள முடியும். இவ்வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3m9MU42
एक टिप्पणी भेजें for "வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய வசதி"