இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள மோட்டோ G51 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
வரும் 10-ஆம் தேதியன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ G51 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். அண்மையில் தான் மோட்டோ நிறுவனம் G31 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. G51 ஸ்மார்ட்போன் ஐரோப்பிய நாடுகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சிறப்பம்சங்கள்!
6.8 இன்ச் IPS LCD டிஸ்பிளே, குவால்காம் SM4350-AC ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் பிரைமரி கேமரா 50 மெகாபிக்சல், 5000 mAh பேட்டரி, டைப் போர்ட் ‘C’ USB, 3.5mm ஆடியோ ஜேக், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் மெமரி மாதிரியான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இதன் விலை அறிவிக்கப்படாமல் உள்ளது. இருந்தாலும் இந்த போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் 5G போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிர் நீலம், கரு நீலம் மற்றும் சில்வர் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EqpVc8
एक टिप्पणी भेजें for "இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள மோட்டோ G51 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!"