SMART எனப்படும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
SMART எனப்படும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒதிஷா மாநிலத்தின் வீலர் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது ஏவுகணையின் முழு திறனும் சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை இந்திய கப்பல் படையில் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல். நீர்மூழ்கிகளை எதிர்த்து தாக்கும் வழக்கமான டார்பிடோ குண்டுகளின் ரேஞ்சை விட அதிக தூரம் கடந்து சென்று எதிரில் வரும் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தினை கொண்டு இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய ‘சந்த்’ எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப்படை கடந்த டிசம்பர் 11 அன்று பொக்ரான் எல்லையில் வெற்றிகரமாக சோதனை செய்திருந்தன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GITUgl
एक टिप्पणी भेजें for "SMART எனப்படும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி"